India
கடந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கிய சம்பவம்.. புகாரளித்த பெண் படுகொலை.. கணவர் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன?
கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் இளம் பெண் ஒருவர் கருகச்சால் காவல்நிலைத்தில் அளித்த புகார் அம்மாநிலத்தில் பெரும் புயலை ஏற்படுத்திய இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரில், தன்னுடைய கணவர் அவரது நண்பர் வீட்டில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற பின்னர் தான் அந்த நிகழ்ச்சிக்கு எதற்காக வந்துள்ளோம் என கேட்டபோது, இளம் பெண்ணிடம் கணவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது கணவரின் நண்பர்களுடம் உல்லசமாக இருக்கும் படி அவர் தனது மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
மீறினால், குழந்தைகளை கொன்றுவிடுவதாகவும் மிரட்டு அவரை பணிய வைத்துள்ளார். அதோடு இல்லாமல், மனைவி வேறு ஆண்களுடன் இருக்கும் அந்தரங்கத்தை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி கடந்த 2 வருடமாக மனைவியை தனது சொந்த லாபத்திற்காக பலருக்கும் விருந்தாக்கியுள்ளார்.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம் பெண், கணவரின் கொடுமைகள் அதிகமானதால் தற்போது வேறு வழியின்றி, போலிஸில் புகார் கொடுத்ததாகவும் இந்த கொடூர சம்பவத்தில் பலரும் தொடர்பு இருப்பதாக இளம் பெண் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கணவர் மீது புகாரளித்த மனைவி கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். ஆனால், அவரின் வீடு நெடுநேரம் பூட்டிக்கிடந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு அந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு அந்த பெண்ணின் உறவினர்களும் தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில், பெண்ணின் கணவரை தேடி அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு அவரது கணவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!