India
PUBG விளையாட்டுக்கு மீண்டும் அனுமதி?.. வெளிவந்தது ஒன்றிய அரசின் நாடகம்!
உலகளவில் பப்ஜி கேம் 60 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை 5 கோடி பேர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்தியாவில்தான் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பப்ஜி மேம் 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கடந்த 2020ம் ஆண்டு pubg உள்ளிட்ட 117 சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இதனால் pubg விளையாடிவந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து 2021ம் ஆண்டு pubg விளையாட்டைப் போன்றே Battlegrounds Mobile India என்ற கேம் வெளிவந்தது. பின்னர் இதை pubg ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். கடந்த ஆண்டு இந்த செயலியும் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் Battlegrounds Mobile India என்ற விளையாட்டிற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், Battleground Mobile India விளையாட்டு மூன்று மாதங்களுக்குச் சோதனை அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாதகாலத்தில் பயனர்கள் அடிமையாதல் போன்ற சிக்கல்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு பிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை இருந்தபோது சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடைவிதித்தது. தற்போது அதே செயலிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது மோடி அரசின் நாடகத்தை வெளிப்படுத்தியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!