India
தண்ணீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர் கண் எதிரே நடந்த கொடுமை!
புதுச்சேரி அருகே உள்ள ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் மணிகண்டன். இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஜஷ்வந்த் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டின் வெளியே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு பெற்றோர் வந்து பார்த்தபோது விளையாடிக் கொண்டிருந்த மகன் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் தனது மகனைக் காணவில்லை என மணிகண்டன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர், வீட்டின் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஜஸ்வந்த் சடலமாக இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஜஷ்வந்த் விளையாடும் போது தண்ணீர் தொட்டியின் மேலே போடப்பட்டிருந்த மரப்பலகை உடைந்து உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!