India
இதற்காகவா இப்படி செய்தார் ?மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை ஆபாச செயலிகளில் பதிவேற்றம் செய்த கணவர் !
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமபெட்டி பகுதியில் வசித்து வரும் செபி (வயது 33) என்பவருக்கும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்துக்கு வரதட்சணையாக 80 கிராம் தங்க நகைகள் மணமகள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வரதட்சணை குறைவாக இருப்பதாக செபி தனது மனைவியிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார். அதோடு கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறும் மனைவியிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தால் அந்த அளவு வரதட்சணை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதனை புரிந்துகொள்ளாத கொள்ளாத கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சுமார் 2.5 ஆண்டுகளாக இந்த சம்பவம் நடந்துவந்த நிலையில், இது அனைத்தையும் அந்த பெண் பொறுத்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதனிடையே பலமுறை கேட்டும் வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த கணவர் தனது மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை ஆபாச செயலிகளில் பதிவேற்றம் செய்துள்ளார். இது சமீபத்தில் அவரின் மனைவிக்கு தெரியவந்த நிலையில், அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து தனது வீட்டாரிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் தனது கணவர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி அந்த பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!