India

"இதாங்க முதல்முறை,,ரயிலில் செய்வது போல செய்துவிட்டேன்" - விமானத்தில் பயணியின் செயலால் நேரவிருந்த விபத்து!

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு `ஆகாச ஏர்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத சம்பவம் ஒன்று விமானி பணியாளர்களுக்கு தெரிந்துள்ளது.

விமானத்தின் கழிவறையில் புகை எழும்புவதாக தெரியவந்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்த விமான பணிப்பெண்கள் கழிவறையை திறந்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பயணி பீடி குடித்துக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அவரை அங்கு இருந்து வெளியேற்றியவர்கள் விமான நிலையத்துக்கும் இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். அதன்படி விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பயணி ராஜஸ்தானின் மார்வார் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பதும் இவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ததும் தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், நான் வழக்கமாக ரயிலில்தான் பயணம் செய்யும்போது கழிவறைக்குள் புகைபிடிப்பேன். அவ்வாறே இங்கும் புகைபிடிக்க நினைத்து, புகைபிடித்தேன் என்றும் எனக்கு விமானத்தின் விதிமுறை தெரியாது என்றும் கூறியுள்ளார்.

எனினும் விமானத்தில் புகைபிடித்து சக பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக பிரவீன் குமாரை அதிகாரிகள் கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து பிரவீன் குமார், பெங்களூரு விமான நிலையத்திலிருந்து பெங்களூரு மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

Also Read: ஓரே ஆண்டில் 35% வீழ்ச்சியை சந்தித்த LIC.. மோடியின் சதியால் 1.89 லட்சம் கோடியை இழந்த அரசின் நிறுவனம் !