India
மருத்துவர் தற்கொலை வழக்கு.. 3 மாதம் கழித்து பா.ஜ.க MP மீது வழக்கு பதிவு செய்த குஜராத் போலிஸ்!
குஜராத் மாநிலம் விராவல் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அதுல் சாக். இவருக்கும் பா.ஜ.க எம்பி சுரேஷ் மற்றும் தந்தை நரன்பாய் ஆகியோருக்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்தது. இதனால் 2008 இருந்து 2023ம் ஆண்டு வரை பல தவணையாக ரூ.1.75 வரை அதுல் சாக்கிடம் இருந்து சுரேஷ் மற்றும் தந்தை நரன்பாய் கடன் பெற்றுள்ளனர்.
பின்னர் இந்த கடனை மருத்துவர் அதுல் சாக் திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணத்தைத் தரமுடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மருத்துவர் பிப்ரவரி 12ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பு மருத்துவர் எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றினர்.
அதில், பா.ஜ.க எம்பியும் அவரது தந்தையும் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் தன்னை ஏமாற்றியதாக எழுதப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் போலிஸார் பா.ஜ.க எம்பி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்தனர்.
இதையடுத்து மருத்துவரின் மகன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பா.ஜ.க எம்.பி மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில் மூன்று மாதங்கள் கழித்து பா.ஜ.க எம்.பி ராஜேஷ் மற்றும் அவரது தந்தை நரன்பாய் ஆகிய இருவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களைக் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!