India
மீண்டும் சரியத் தொடங்கிய அதானி நிறுவன பங்குகள்.. ஒரே நாளில் 5% வரை சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அச்சம்!
அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 24-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி நிறுவன பங்குகளின் இந்த சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC, உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.அதானியின் நிறுவனங்களில் LIC நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24 ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளது.
இந்த சரிவை தடுக்க அதானி நிறுவனம் பல்வேறு ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. கடன்களை அடைப்பது, பங்கு வெளியீட்டை தள்ளி வைத்தது போன்ற செயல்கள் மூலம் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை தக்க வைக்க முயன்றது. ஆனாலும், அதானி நிறுவனங்கள் மேல் நம்பகத்தன்மை குறைந்ததால் அதன் பங்குகள் விலையில் சீரற்ற தன்மையை நிலவுகிறது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தன்னிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் நிதிதிரட்டும் செயலில் அதானி குழுமம் ஈடுபட்டது. ஆனால் அந்த செயல் எதிர்மறையான செயலை ஏற்படுத்தி அதானி நிறுவனங்கள் மீதான உறுதித்தன்மையை குறைத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த அதானி நிறுவன பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அதானி குழுமப் பங்குகளின் விலை 2.5 சதவீதம் வரை மீண்டும் சரியத் தொடங்கியிருக்கிறது.அதானி டிரான்ஸ்மிஷன் 5 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் 5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜி 3.1 சதவிகிதம், அதானி வில்மர் 1.4 சதவிகிதம், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமென்ட் தலா 0.8 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அதானிக்கு மீண்டும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. .
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!