India
‘சுழல்’ பட பாணியில் கொடூரம்: சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய சித்தப்பா.. கட்டி வைத்து அடித்த ஊர்மக்கள் !
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை அடுத்துள்ளது நீலகுண்டா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நாகராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், இவரது மனைவி மீண்டும் கர்ப்பமுற்றிருந்தார். எனவே, அவர் அவரது தாய் வீட்டுக்கு தனது குழந்தைகளுடன் செல்ல, இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த சூழலில் இவரை அவரது பக்கத்து வீட்டில் இருந்த சொந்த அண்ணன் குடும்பம் கவனித்து வந்துள்ளது. ஆனால் நாகராஜோ, தனது அண்ணன் பிள்ளையை தவறான எண்ணத்தோடு அணுகியுள்ளார். அதன்படி தனது மனைவி வீட்டில் இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்த எண்ணிய, நாகராஜ் சிறுமியை வீட்டு தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்துள்ளார்.
பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இப்படியே தொடர்ந்து ந்டைபெற்றதில், ஒருமுறை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். தொடர்ந்து பலமுறை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியை, வீட்டில் யாரிடமாவது கூறினால், அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி வீட்டிலும் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை தாய் கண்டறிந்துள்ளார். இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு கூட்டி சென்றபோது, அங்கே சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் விசாரிக்கவே, தனக்கு நேர்ந்த கொடுமையை கதறி அழுதுகொண்டே சிறுமி கூறியுள்ளார். இதனை கேட்டதும் ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், உறைவினர் என அனைவரும், நாகராஜை அருகில் இருக்கும் மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார்.
தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையிலும் புகார் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகராஜை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்பட பாணியில் சொந்த சித்தப்பாவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 8 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!