India
#Karnataka Election Results| 121 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை.. ஆளும் பா.ஜ.க கடும் பின்னடைவு!
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, ஜனதா தளம் கட்சிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க 73 தொகுதிகளில் முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ஜனதா தள கட்சி 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் 8 பா.ஜ.க அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
அதேபோல் கனகவுரா தொகுதியில் போட்டியிட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் உள்ளார். மேலும் வருணா தொகுதியில் போட்டியிட்டுள்ள சித்தராமையா முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க அமைச்சர் சோமன்னா கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
தற்போது நிலவரப்படி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் இப்போதே வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும் என பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவு நிலவரமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!