India
அடுத்தடுத்து நிகழும் திடீர் மரணங்கள்.. திருமண மேடையில் நடனமாடிய நபர் மாரடைப்பால் பலி - பகீர் வீடியோ !
நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடனமாடும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சென்னையில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சத்தீஸ்கரில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தன் மாவட்டம் டோங்கர் பகுதியில், பலோட் பகுதியைச் சேர்ந்த திலீப் ரெளஜ்கர் என்பவர் பிலாய் ஸ்டீல் ஆலையின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் அவரது நண்பரின் திருமணத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு உணவருந்திவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையில் ஓரத்தில் உட்காந்திருந்த திலீப் ரெளஜ்கர் அடுத்த சில வினாடிகளிலேயே மேடையில் சரிந்து கிழே விழுந்தார்.
இதனால் பதறிப்போன மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு திலீப் ரெளஜ்கரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது, விழா மேடையில் மாரடைப்பு ஏற்பட்டே திலீப் ரெளஜ்கர் உயிரிழந்திருப்பது மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் மூலம் தெரிந்திருப்பதாக தகவல் அளித்துள்ளனர். திருமண மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!