India
ஆபாச வீடியோவால் கணவர் தற்கொலை..மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞர் கொடூரமாக கொலை.. தெலங்கானாவில் அதிர்ச்சி !
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில், இந்தரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 24 வயதான மூத்த மகள் அதே ஊரை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் காதலர்களுக்கும் சில பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் காதலை முறித்துக் கொண்டுள்ளனர். ஆனால், சில நாட்களுக்கு பின்னர் காதலை தொடருமாறு மகேஷ் அந்த பெண்ணிடம் மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்த பெண்ணுக்கு வீட்டார் பார்த்த மாப்பிள்ளையோடு திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஷ் அந்த பெண்ணோடு காதலிக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்ட வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ அந்த பெண்ணை திருமணம் செய்த நபருக்கும் வர அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து இதுகுறித்து வருத்தத்தில் இருந்த அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு பிறகும் மகேஷ் அந்த பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் இருதரப்புக்கும் சமரசம் பேசியுள்ளனர். எனினும் மகேஷ் அந்த பெண்ணிடம் தொடர்ந்து தகராறு செய்துவந்துள்ளார்.
இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் மகேஷ் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து மீண்டும் தொந்தரவு செய்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் வீட்டார் அங்கிருந்த கத்தியை எடுத்து மகேஷை தாக்கியுள்ளனர். இதில் கீழே விழுந்த மகேஷின் தலையில் அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து போட்டு கொடூரமாக கொலையும் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!