India
"என் உயிரை கொடுத்தாவது நாட்டை காப்பாற்றுவேன்"... மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருக்கமான பேச்சு!
இரமலான் பண்டிகையை முன்னிட்டு மேற்குவங்க மாநிலம் பானர்ஜி நகரின் ரெட்டி ரோட்டில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "வங்காளத்தில் அமைதியை நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு கலவரம் வேண்டாம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். நாட்டில் பிளவுகளை நாங்கள் விரும்பவில்லை. நாட்டில் பிளவுகளை உருவாக்க விரும்புவோர் இன்று ஈத் நாளில் உறுதியளிக்கிறேன். என் உயிரைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் நாட்டைப் பிரிக்க விடமாட்டேன்.
யாரோ ஒருவர் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதாகக் கூறுகிறார்கள். முஸ்லீம் வாக்குகளை பிரிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை.
மேற்குவங்க மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். ஒன்றிய ஏஜென்சிகளுக்கு எதிரான பேராட்டத்தில் ஒருபோதும் தலை குனியமாட்டேன். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தவறினால் அனைத்தும் முடிந்து விடும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“துறை செயலாளர் இல்லாமல் திண்டாடும் வேளாண் துறை” : தூங்குமூஞ்சி த.வெ.க அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
பாமாயில் விவகாரம் : “3 மாதத்தில் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்...” - தவெக அரசை அம்பலப்படுத்திய உதயநிதி!
-
தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது? : த.வெ.க அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி!
-
🔴LIVE UPDATES: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் - வாக்குச்சாவடியில் முறைகேடு செய்யும் தவெக!
-
துவரம் பருப்பு கொள்முதல் விவகாரம் : வழக்கம்போல் திமுக மீது பொய் பழி... ஸ்டிக்கர் ஒட்டும் தவெக... விவரம்!