India
உஷார்! 70 லட்சம் சம்பளம்.. பங்களா.. சொகுசு கார்.. அடுக்கடுக்கான பொய் கூறி Matrimony தளத்தில் இளைஞர் மோசடி
டெல்லியில் அமைந்துள்ளது கேசவ்புரம். இங்கு இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். பட்டப்படிப்பு முடித்திருக்கும் அந்த பெண் குருகிராமில் உள்ள MNC கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இந்த பெண்ணின் பெற்றோர் இவருக்கு வரண் பார்த்துள்ளனர். எனவே இவரது தகவலை மேட்ரிமோனி தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
அந்த சமயத்தில் அதே தளத்தில் இளைஞர் ஒருவரின் ப்ரொபலை பார்த்துள்ளனர் பெண் வீட்டார். அதில், தான் ஒரு HR ஊழியர் எனவும், 70 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும் குறிப்பிட்டிருந்துள்ளார். பின்னர் அவருக்கு ரெக்வஸ்ட் கொடுத்து பேச தொடங்கியுள்ளனர். எனவே பெண்ணும், அந்த இளைஞரும் மொபைல் எண்ணை பரிமாறி கொண்டு சில நாட்களாக பேசி வந்துள்ளனர்.
அப்போது அந்த இளைஞர் தான் பெரிய பங்களாவில் வசிப்பதாகவும், சொகுசு கார் வைத்திருப்பதாகவும் கூறியுயுள்ளார். மேலும் அது தொடர்பான புகைப்படங்களையும் பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். எனவே பெண் வீட்டாருக்கு இந்த இளைஞரை பிடித்து போயுள்ளது. தொடர்ந்து இவர்கள் பேசுகையில், பெண்ணுக்கு குறைந்த விலையில் ஐபோன் புதுமாடல் வாங்கி தருவதாக கூறியுள்ளர்.
இதனை நம்பிய பெண், அவருக்கு ரூ.3.05 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். பணம் வங்கி கணக்குக்கு வந்த பிறகு அந்த நபர் சரியாக பேசவில்லை. மாறாக தனக்கு ஒரு விபத்து நடந்துள்ளது என்றும், தன்னால் சிறிது காலம் பேச முடியாது என்றும் பெண்ணுக்கு தெரிவித்து விட்டு, அந்த பெண்ணை எல்லாவற்றிலும் பிளாக் செய்துவிட்டு மொபைல் எண்ணை தூக்கி வீசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர் உடனடியாக இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் விஷால் என்றும் தெரியவந்தது. மேலும் 26 வயதுடைய இளைஞரான இவர் MBA படித்து முடித்துவிட்டு ஒரு MNC கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு ஹோட்டல் ஒன்றை தொடங்கினார். அது ஒருபுறம் போய் கொண்டிருக்க, குறுகிய காலத்தில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், விஷால் மேட்ரிமோனி தளத்தில் போலியாக ப்ரொபைலை உருவாக்கி அதன்மூலம் சம்பாதிக்க நினைத்துள்ளார். அதன்படி டெல்லி குடும்பம் அவரது வலையில் சிக்கி கொண்டது.
அந்த பெண்ணை நம்ப வைக்க, கண்ணில் பட்ட சொகுசு பங்களா, கார் உள்ளிட்டவையை போட்டோ எடுத்து அவருக்கு அனுப்பி வந்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவரை பிளாக் செய்துள்ளது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் வேறேனும் பெண்களை இதுபோல் மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னிடம் சொகுசு பங்களா, கார் உள்ளிட்டவை இருப்பதாக கூறி மேட்ரிமோனி தளத்தின் மூலம் டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை உத்தர பிரதேச ஆசாமி ஒருவர் ஏமாற்றி பணம் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !