India
“இந்தா செல்லம் சாப்பிடு..” காதலிக்கு Cake ஊட்டி விட்டு கழுத்தை அறுத்த காதலன்: வெறிச்செயலின் பின்னணி என்ன?
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே இருக்கும் லாகரே என்ற பகுதியில் வசித்து வந்தவர் நவ்யா.24 வயதுடைய இளம்பெண்ணான இவர், கல்லூரி முடித்துவிட்டு காவல் துறையின் உள் பாதுகாப்பு பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இதனிடையே இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நவ்யாவுக்கு, பிரசாந்த் குடும்பம் உறவினர் ஆவார். எனவே இவர்கள் காதல் விவகாரத்துக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பாது என்ற நம்பிக்கையில் காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த செவ்வாய்கிழமை நவ்யாவுக்கு பிறந்தாநாள் வந்துள்ளது. அப்போது அவரது பிறந்தநாளை கொண்டாட பிரசாத்துக்கு நவ்யா குடும்பத்தினர் அழைப்பு விடுத்தனர். அப்போது தான் பிசியாக இருப்பதாக பிரசாந்த் கூறியதால் நவ்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று (ஏ.14) நடைபெற்றது.
எனவே பிரசாந்தும் காதலி நவ்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்தார். அப்போது இரவு நேரத்தில் கேக் வெட்டிய நவ்யாவுக்கு காதலன் பிரசாந்த் கேக் ஊட்டி விட்டுள்ளார். அப்போது கேக்கை வாங்க வாயை திறந்த நவ்யாவின் கழுத்தை சட்டென்று அறுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்து போன பெண் வீட்டார் கத்தி கூச்சலிட்டனர். அதோடு இதுகுறித்து உடனே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
நவ்யாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் அதுக்குள்ளேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நவ்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த காதலன் பிரசாந்தையும் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது காதலி நவ்யா, வேறு ஒருவருடன் இரகசியமாக பேசி வந்ததாகவும், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும், நவ்யா மீதுள்ள சந்தேகத்தினால்தான் அவரை கொலை செய்ததாவும் காதலன் பிரசாந்த் வாக்குக்கமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
காதலி மீது சந்தேகத்தினால் அவரது பிறந்தநாளில் கேக் ஊட்டிவிட்டு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனின் வெறிச்செயல் பெங்களுருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!