India
விடாமல் துரத்திய காதலன்.. நண்பர்கள் மூலம் கடத்தி நிர்வாணபடுத்தி கொடுமை: காதலியின் கொடூர செயலின் பின்னணி ?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ளது வர்கலா என்ற பகுதி. இங்கு வசிக்கும் இளைஞர் ஒருவர் அந்த பகுதி கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியா என்பவரும் இடையே காதல் இருந்துள்ளது. இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்ததில் இருந்தே நண்பர்களாக பழகி காதலித்து வந்துள்ளனர்.
தற்போது காதலி கல்லூரி படித்து வருகிறார். இந்த சூழலில் திடீரென அந்த இளைஞரை பிரிய எண்ணியுள்ளார் காதலி லட்சுமி. இதனால் அவரிடம் சரிவர பேசாமல் தவிர்த்துள்ளார். தொடர்ந்து காதலன் இதுகுறித்து விசாரிக்கையில், காதலிக்கும், அவரது கல்லூரியில் படிக்கும் வேறு இளைஞருக்கு காதல் இருந்ததாக காதலனுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அவர் காதலியிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபம் கொண்ட லட்சுமி பிரியா தனது நண்பர்களுக்கு இதுகுறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் உதவியோடு அனைவரும் சேர்ந்து இந்த இளைஞரை கடத்தி சித்திரவதை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
பின்னர் எர்ணாகுளம் பகுதியுள்ள சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்ற அவர்கள், இளைஞரிடம் இருந்த நகை பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் 8 பேர் குற்றவாளிகளாக இருக்கும் நிலையில், அதில் முதல் குற்றவாளியான லட்சுமி பிரியா, மற்றும் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த அமல் (24) ஆகியோரை கைது செய்துள்ளனர். மீதம் இருக்கும் 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புது காதலுக்காக தனது காதலனை பிரிய நினைத்த காதலியை விடாமல் துரத்தியதால் நண்பர்கள் மூலம் கடத்தி அவரை நிர்வாணபடுத்தி கொடுமை செய்துள்ள காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !
-
"ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சரியானது அல்ல" - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா !