India
காணாமல் போன 2 வயது குழந்தை.. பக்கத்து வீட்டு laptop பையை திறந்த பெற்றோருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் நெய்டா பகுதியைச் சேர்ந்தவர் ஷிவ்குமார். இவரது மனைவி மஞ்சு. இந்த தம்பதிக்கு மான்சி என 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது குழந்தை மான்சிகாணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு பல இடங்களில் தேடியும் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலிஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தை கடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் பக்கத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் பக்கத்து வீட்டில் சோதனை செய்தனர். அப்போது லேப்டாப் பையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குழந்தை மான்சி சடலம் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு குழந்தையின் சடலத்தை மீட்டு போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதா? என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பக்கத்து வீட்டுக்காரர் ராகவேந்திராவை போலிஸார் தேடிவருகின்றனர்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !