India
சச்சின் எந்த விளையாட்டு வீரர்.. குஜராத் மாநில வினாத்தாளில் சர்ச்சை.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !
கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த ஒரே வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும் சரவதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரன்களை கடந்து யாரும் படைக்காத சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் சச்சின் டெண்டுல்கர் குறித்த பாடங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது குஜராத் மாநிலத்தில் சச்சின் டெண்டுல்கர் குறித்து தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், சச்சின் டெண்டுல்கர் எந்த விளையாட்டின் வீரர் என்று கேட்கப்பட்டுள்ளது.
இதற்காக கொடுக்கப்பட்ட 4 விருப்பங்களில் ஹாக்கி, கபடி, கால்பந்து, செஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விருப்பங்களில் கிரிக்கெட் குறிப்பிடப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவு தேர்வு கேள்வித்தாள் தயாரிப்பாளர்கள் எப்படி அஜாக்கிரதையாக இருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத் காங்கிரஸ் பட்டியல் சாதி பிரிவு தலைவர் ஹிதேந்திர பிதாடியா இந்த வினாத்தாளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து அதில், இதுதான் குஜராத் மாடலா? எனக் கேட்டு கிண்டல் செய்துள்ளார். மேலும், பல்வேறு சமூகவலைதள வாசிகள் இந்த வினாத்தாளை பதிவிட்டு அரசை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!