India
2 மகன்களை ஏரியில் தள்ளி கொலை.. தந்தை தற்கொலை : விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரபி பெல்தாரி. இவரது மனைவி பானு. இந்த தம்பதிக்கு இம்ரான், சோஹைல் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவி பானுவுக்கு வேறு ஒரு ஆணுடன் வழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கணவர் ரபி பெல்தாரிக்கு தெரியவந்துள்ளது. இந்த பழக்கத்தை விடும்படி அவர் மனைவியும் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மனைவியை அடித்து விட்டு தனது இரண்டு மகன்களை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இவர்கள் மூன்று பேரும் சென்று பல மணி நேரம் ஆகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் இவர்களைப் பல இடங்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து இது குறித்து மனைவி பானு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பொக்கராய செருவு என்ற இடத்தில் உள்ள ஏரியில் மூன்று பேர் சடலம் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்குச் சென்று பார்த்தபோது அது ரபி பெல்தாரி அவர்களது மகன் இம்ரான், சோஹைல் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரின் உடலை மீட்டு போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் உயிரிழந்த ரபி பெல்தாரின் சட்டைப் பையிலிருந்து கடிதம் ஒன்றை போலிஸார் மீட்டுள்ளனர். அதில், மனைவியின் நடவடிக்கை சரியில்லாததால் நாங்கள் மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம். அவர் தனக்குப் பிடித்தவருடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என எழுதி இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!