India
‘வாரத்தில் ஏழு நாளும் வேலையா?’ : மாடுகளுக்கு Week off கொடுத்த ஜார்கண்ட் கிராம மக்கள் !
ஜார்க்கண்ட் மாநிலம் லடேஹர் என்னும் இடத்தில் சக்லா பஞ்சாயத்து அமைந்துள்ளது. இங்குள்ள துரிசோத் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களில் ஒரு வித்தியாசமான பழக்கம் நடைமுறையில் உள்ளது. அதாவது மனிதர்கள் 6 நாள் வேலை செய்து 7-ம் நாளில் விடுமுறை எடுப்பதை போல இங்கு 6 நாள் மாடுகளுக்கு வேலை வாங்கி 7-ம் நாள் ஓய்வு கொடுக்கப்படுகிறது.
இந்த பழக்கம் சுமார் 100 ஆண்டுகளாக இந்த பகுதியில் பின்பற்றப்படுவதாக அந்த கிராமமக்கள் கூறியுள்ளனர். இந்த கிராமங்களில் சில மக்கள் வியாழக்கிழமை அன்றும், சிலர் ஞாயிற்றுக்கிழமை அன்றும் மாடுகளுக்கு ஓய்வு தருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய அந்த கிராமமக்கள், பல ஆண்டுகளுக்கு முன்னர் துரிசோத் கிராமத்தில் காளை மாடு ஒன்று வயலில் உழுது கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தது. மாடுகளுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்குவதே இதுபோன்ற மரணங்களுக்கு காரணம் என அந்த மக்கள் கருதியுள்ளனர்.
இதன் காரணமாக பசுமாடு, காளை மாடு, எருமை மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுக்க முடிவு செய்து அதனை துரிசோத் கிராம மக்கள் பின்பற்றியுள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்து மக்களும் இது நல்ல முடிவாக இருப்பதால் துரிசோத் கிராம மக்களின் வழியை பின்பற்றி மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுத்து வந்துள்ளனர்.
இப்படி மாடுகளுக்கு ஒருநாள் ஓய்வு கொடுப்பதால் அந்த மாடுகள் சுறுசுறுப்பாக வேலை செய்வதாகவும், மாடுகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அவை நல்ல நிலையில் நீண்ட காலம் இருப்பதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். மேலும், மாடுகளுக்கு ஓய்வு கொடுக்கும் நாளில் பால் கூட கறப்பதில்லை என்றும் கூறியுள்ளனர்.
தற்போதைய நிலையில், இந்த பஞ்சாயத்து தவிர ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்து ஓய்வு வழங்கப்படுகிறது என்று ஜார்க்கண்ட் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகமும் அறிவித்துள்ளது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!