India
"கோவிலுக்கு செல்லும் வழியில் துர்நாற்றம் வருகிறது" - 9 நாட்கள் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்ட பாஜக மேயர்!
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர ஹிஜாப், மாட்டிறைச்சி , இறைச்சி உணவு என யார் எந்த உணவை உண்ண வேண்டும் , எந்த உடையை உடுத்த வேண்டும் போன்ற கருத்துக்களையும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். மேலும், ரயில்வே போன்ற இடங்களில் சைவ உணவு என்ற தங்கள் திட்டங்களையும் தொடர்ந்து திணித்து வருகின்ற்னர்.
அந்த வகையில் தற்போது ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 11 வரை அனுசரிக்கப்படும் நவராத்திரியின் போது ஒன்பது நாட்களுக்கு இறைச்சிக் கடைகளை மூடவேண்டும் என பாஜக தலைமையிலான தெற்கு தில்லி மாநகராட்சி தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும், நவராத்திரியின் போது இறைச்சிக் கடைகளை மூடுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து தெற்கு டில்லி மேயர் முகேஷ் சூர்யான் வெளியிட்ட கடிதத்தில், "ஒன்பது நாள் திருவிழாவின் போது, பக்தர்கள் தங்கள் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டைப் பயன்படுத்துவதைக் கூட தவிர்க்கிறார்கள். திறந்த அல்லது கோவில்களுக்கு அருகில் இறைச்சி விற்கப்படுவதைப் பார்ப்பது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
அவர்கள் இறைச்சிக் கடைகளுக்குச் செல்லும்போது அல்லது தினசரி பிரார்த்தனை செய்ய அவர்கள் செல்லும் வழியில் இறைச்சியின் துர்நாற்றத்தைத் தாங்க வேண்டியிருக்கும் போது அவர்களின் மத நம்பிக்கையும் உணர்வுகளும் பாதிக்கப்படுகின்றன. சில இறைச்சிக் கடைகள் சாக்கடைகளில் அல்லது சாலையோரம் கழிவுகளை கொட்டி அதனை தெருநாய்கள் உணவளிக்கின்றன," என்று கடிதத்தில் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!