India

தாத்தாவின் இறுதிச்சடங்கை வீடியோவாக வெளியிட்ட YOUTUBER.. 4 நாளில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரல் !

இணையதளம் பெருகிவிட்ட இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகம் அதிகரித்தவண்ணம் உள்ளது. சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், யூடியூப் போன்றவையே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிலும் யூடியூப் தளம் படைப்பாளிகளுக்கு அதிக வருமானத்தை கொடுப்பதால் அதில் ஏரளமானவர்கள் புதிய புதிய வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர்.

வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர்கள் வீடியோகள் அதிக மக்களை சென்றடைவதால் சிலர் பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்துவருகின்றனர். அதன்படி யூடியூபர் ஒருவர் வெளியிட்ட வீடியோவை சிலர் பாராட்டியும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

லக்ஷய் சவுத்ரி என்பவர் 'லக்ஷய் சௌத்ரி விலாக்ஸ்' என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இவரின் இந்த பக்கத்தை 4 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ள நிலையில், இவரின் வீடியோகளை ஏராளமானோர் பார்த்தும் வந்துள்ளனர். இந்த நிலையில், இவர் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி, லக்ஷய் சவுத்ரியின் தாய்வழி தாத்தா மரணமடைந்த நிலையில், அவருக்கு நடைபெற்ற இறுதிச்சடங்கை லக்ஷய் சவுத்ரி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவில் தனது தாத்தா எந்த வருத்தமும் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்ததாகக் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இவரின் இந்த நடவடிக்கையை சிலர் விமர்சித்த நிலையில், பலரும் வித்தியாசமான முறையில் வீடியோ வெளியிட்டதாக பாராட்டியும் வருகின்றனர்.