India
“இனி ஒருத்தன் கை வைக்க முடியாது..” : வட இந்தியாவில் உருவானது திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு !
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்காக திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு தொடங்கிவைக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் மாணவர் கூட்டமைப்பை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தொடங்கிவைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கலைஞர், பெரியார் புத்தங்களை வெளியிட்டார்.
டெல்லி உள்ளிட்ட வட இந்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் எஸ்.இ, எஸ்.டி, ஓ.பி.சி, சிறுபான்மை மாணவர்களின் நலனுக்காக திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களான செந்தில் குமார், எம்.எம்.அப்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
டெல்லி உள்ளிட்ட வட இந்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் எஸ்.இ, எஸ்.டி, ஓ.பி.சி, சிறுபான்மை மாணவர்களின் நலனுக்காக இந்த திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், முத்தமிழறிஞர் கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானங்கள் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு, தந்தை பெரியார் குறித்த மூன்று முக்கிய ஆங்கில நூல்கள் வெளியிடப்பட்டன.
புத்தாங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வெளியிட்டார். அதனை அகில இந்திய ஓ.பி.சி பணியாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கருணாநிதி பெற்றுகொண்டார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைகழகம், வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர்கள் சங்க தலைவர்கள் திராவிட சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் குமார் எம்.பி., “ஜெ.என்.யூ பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், திராவிடர் மாணவர் கூட்டமைப்பு டெல்லி உள்ளிட்ட வட மாநில மாணவர்களுக்கு முக்கிய தேவையாக உள்ளது. இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து எம்.எம்.அப்துல்லா பேசுகையில், தமிழக அரசியல், சமூக வரலாற்றை வட இந்தியாவில் உள்ளவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக கலைஞர், பெரியார் புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!