India
5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கணவர்.. வீடியோ எடுத்த மனைவி.. ஒடிசாவில் அதிர்ச்சி !
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகன்நாத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலியா ருஞ்சிகர் (வயது 38). இவரின் மனைவி பத்மா (வயது 35). இவர் மாநில சுகாதாரத்துறையில் பணிபுரிந்துவருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் பத்மாவின் உறவினர் ஒருவர் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
பத்மாவும் அவரது உறவுக்கார பெண்ணும் சேர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் நிலையில், வழக்கம்போல கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பத்மா அந்த கர்ப்பிணியை மருத்துவ பரிசோதனைக்கு செல்லலாம் எனக் கூறி அழைத்துச்சென்றுள்ளார்.
ஒரு வண்டி ஒன்றில் சென்ற கர்ப்பிணியை அழைத்துச்சென்ற பத்மா ஆள் அரவம் இல்லாத வீட்டுப் பகுதிக்கு சென்று அங்கு ஒருவரை சந்திக்கவேண்டி இருப்பதாக கூறி வீட்டுக்குள் அழைத்துசென்றுள்ளார். அங்கு பத்மாவின் கணவர் லலியா ருஞ்சிகர் இருந்துள்ளார்.
வீட்டில் சென்றதில் பத்மாவும் அவரின் கணவரும் சேர்ந்து அந்த கர்ப்பிணி பெண்ணை மிரட்டி கணவரின் பாலியல் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர். அதோடு பத்மாவின் கணவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். மேலும், அதை பத்மா வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
மேலும், இதனை வெளியே சொன்னால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் அந்த கர்ப்பிணி யாரிடமும் கூறாத நிலையில், அந்த தம்பதி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது அந்தப் பெண்ணுக்கு தெரியவந்த நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனே அவரின் உறவினர்கள் அவரை மீட்டு இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது இந்த சம்பவம் வெளியே வந்தது. பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பத்மா மற்றும் அவரின் கணவரை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!
-
“கரூர் துயரத்தில் பொய்த் தகவல்களை கூறும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
“பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
🔴LIVE | கரூர் துயரம் - பேரவையில் காரசார விவாதம்... பழனிசாமியை கேள்விகளால் துளைத்தெடுத்த அமைச்சர்கள்!
-
“இனியாவது திருந்த வேண்டும் : அ.தி.மு.க வெளிநடப்பு” - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!