India
“இந்தியாவுக்கு எதிராக எதையும் பேசவில்லை.. அதானி விவகாரத்தை திசை திருப்ப முயற்சி”: ராகுல் காந்தி விளக்கம்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி சமீபத்தில் லண்டன் சென்று அங்கிருந்த பல்கலைகழகத்தில் சிறப்புரையாற்றினார். மேலும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிய ராகுல், 'இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது கடினம்.
இந்தியாவில் அரசியல் தலைவர்களே ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். என்னுடைய செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருளை நிறுவியிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிப்பது இல்லை. விவாதங்கள் நடத்த அனுமதிப்பது இல்லை' என்று ராகுல் பேசினார்.
இதனையடுத்து ராகுல் காந்தி எம்.பியின் பேச்சை தவறாக விமர்சித்து விட்டதாக பா.ஜ.க கும்பல்கள் விமர்சித்து வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மோடி, அதானி குறித்து மக்களவையில் உரையாற்றினார். இதுதொடர்பாக எந்த விளக்கமும் ஒன்றிய அரசு ஒடுக்காமல், அவரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியுள்ளது.
இந்நிலையில் ராகுல்காந்தி நாடாளுமன்றம் வருகை தந்தார். பின்னர் லண்டனில் பேசியது குறித்து ராகுல் காந்தி எம்.பி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி எம்.பி., “லண்டன் கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராக நான் எதையும் பேசவில்லை.
சபாநாயகரை சந்தித்து மக்களவையில் பேசுவதற்கு அனுமதி கோரியுள்ளேன். பிரதமர் மோடி, அதானி குறித்து நான் பேசியது அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரம் உள்ளிட்ட பிரதான பிரச்சனையிலிருந்து திசை திருப்ப ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி.க்கள் கூச்சலிட்டு அவையை 4வது நாளாக முடக்கியுள்ளது.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!