India
காதலன் இறந்த ஒரே மாதத்தில் காதலி எடுத்த விபரீத முடிவு.. வீட்டின் கதவை திறந்த பக்கத்து வீட்டார் அதிர்ச்சி!
சென்னை அடுத்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் மைத்தீஸ்வரி. இவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சுரேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால் மைத்தீஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து சுரேஷ் மகளுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை.
பல முறை போன் செய்தும் எடுக்காததால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது.
இவர்கள் கதவைத் தட்டிப்பார்த்தும் மைத்தீஸ்வரி திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே பெற்றோர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார் மைத்தீஸ்வரி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை மைத்தீஸ்வரி காதலித்துவந்தது தெரியவந்தது. மேலும் கடந்த 10ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு, உன்னை நேரில் பார்க்க வேண்டும் என பிரவீன், மைத்தீஸ்வரிக்கு போன் செய்து கூறியுள்ளார். இதற்கு அவர் இன்று வரமுடியாது. திங்கட்கிழமை பார்க்கலாம் என கூறியுள்ளார்.
ஆனால் பிரவீன், நீ இன்றே வரவில்லை என்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்ற கடிதத்தை எழுதிவைத்து விட்டு பிரவீன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தெரிந்து மனவேதனை அடைந்த காதலி மைத்தீஸ்வரி இன்றைய தினமே தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அவரை தடுத்து அறிவுரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில்தான் வீட்டில் யாரும் இல்லாதபோது காதலன் இறந்த ஒரு மாதத்தில் மைத்தீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிந்தது.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!