India
பொய்யான தகவல்களை காட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்கள்: நாடாளுமன்ற நிலைக்குழு குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளே அதானி குழு முறைகேடு விவகாரம், ஆன்லைன் மசோதா உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், விமான நிறுவனங்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து அதிக கட்டணம் வசூலிப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு, நாடாளுமன்ற கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி விஜயசாய் ரெட்டி தலைமையில் செயல்பட்டுவருகிறது. நேற்று அந்த துறைக்கான ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இருக்கைகள் பெரும்பான்மையும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்த அளவுக்கான இருக்கைகளே காலியாக உள்ளதாக விமான நிறுவனங்கள் ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இப்படி இணைய தளத்தில் பொய்யான தகவல்களைப் பதிவிட்டு விமான டிக்கெட் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனைத் தடுத்து பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் டிக்கெட் கிடைக்க உரிய வழிகாட்டு விதிமுறைகளை விமானப் போக்குவரத்துத் துறை வகுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் விமானச் சேவை இருந்து வருகிறது. விமானங்களின் கட்டணம் அதிகமாக இருக்கிறது என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மீது ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்காமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!