India
நட்பில் விரிசல்.. தோழியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்: அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
வடகிழக்கு டெல்லியின் நந்த் நாக்ரி பகுதியைச் சேர்ந்தவர் காசிம். வாலிபரான இவர் செல்போன் பழுதுபார்க்கும் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் ஒரு வருடங்களுக்கு மேலாக நட்பாகப் பழகி வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சிறுமி காசிமுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் காசிம் அவரை தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சிறுமி வீட்டிற்கு வந்த காசிம் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தான் எடுத்து வந்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். இதில் சிறுமியின் தோளில் குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார்.
பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு சிறுமியின் தாயார் உள்ளே வந்து பார்த்தபோது மகள் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த காசிமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நட்பாக பழகிய தோழியை வாலிபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!