India
மிசோரம் : மது அருந்துவதை போட்டுக்கொடுத்ததால் ஆத்திரம்.. போலீசே போலீசை 15 முறை சுட்டுக்கொன்ற கொடூரம் !
மிசோரம் - அசாம் மாநிலங்களில் எல்லையில் அமைந்துள்ளது புர்சப் என்ற கிராமம். இந்த கிராமத்தில் சோதனைச் சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் லால்ரவ்லா, இந்திரகுமார் ராய், பிமல் கண்டி சுக்மா என 3 கால்வதறை அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு பிமல் கண்டிக்கு குடிப் பழக்கமும் இருந்துள்ளது. அதுவும், பணிக்கு வரும்போதும் குடித்து விட்டு அடிக்கடி வந்துள்ளார் பிமல். இதனால் இவருக்கும், அந்த 2 போலீசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குள் பகையும் ஏற்பட்டுள்ளது.
பிமலின் செய்கை பிடிக்காமல் லால்ரவ்லா, இந்திரகுமார் ராய் ஆகியோர் தங்கள் உயர் அதிகாரிகளிடம் பிமல் மது அருந்துவதை குறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பிமல், அவர்கள் இருவரிடமும் நேற்று இரவு நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறவே, ஆத்திரத்தில் தனது துப்பாக்கியை எடுத்து லால்ரவ்லா, இந்திரகுமார் ராய் ஆகிய 2 போலீசையும் சுட்டுள்ளார்.
பிமல் அவர்களை சுமார் 15 முறை சுட்டதில், இருவரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் சரிந்து விழுந்தனர். தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தில் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது லால்ரவ்லா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த இந்திரகுமார் ராயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பிமலை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தன்னை பற்றி இருவரும் மேலதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால், சுட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அதோடு சம்பவம் நடந்த அன்றும் அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மது அருந்துவதை போட்டுக்கொடுத்ததால் அதிரமடைந்த போலீசார், தன்னுடன் பணிபுரிந்த சக போலீசை சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் மிசோராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைநகர் டெல்லியில் சிக்கிம் காவல்துறை அதிகாரி தன்னுடன் பணிபுரியும் 2 சக போலீஸ் அதிகாரிகளை சுட்டு கொலை செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!