India
காதலியின் கணவரை கடத்தி மொட்டை அடித்து சிறுநீர் கழித்த காதலன்.. ஆந்திராவில் அதிர்ச்சி!
ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்திலுள்ள சந்திரகிரியை சேர்ந்தவர் அப்பாராவ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் பின்னர் பிரச்சனை எழுந்துள்ளது.
அப்பாராவ்வின் மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் அப்பாராவ்வுக்கு தெரியவந்த நிலையில், அவர் இதுகுறித்து மனைவியை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.
ஆனால், அவர் மனைவி கணவரின் பேச்சை கேட்காத நிலையில், கடும்கோத்தில் மனைவியின் காதலரை புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு RIP என அவர் இறந்ததாக பதிவிட்டுள்ளார். இந்த புகரிப்படம் தற்போது பெங்களூரில் வேலைபார்த்து வரும் அப்பாராவ் மனைவியின் காதலருக்கு எட்டியுள்ளது.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அவர் அப்பாராவ்வுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என்று, தனது நண்பருடன் சேர்ந்து அப்பாராவை காட்டு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு சென்றதும் அவரை இருவரும் சேர்ந்து தாக்கி அப்பாராவ் மீது சிறுநீர் பெய்து அவரின் தலைக்கு மொட்டை அடித்துள்ளனர்.
மேலும், உங்கள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று அப்பாராவை மிரட்டி பேச வைத்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினர் இது தொடர்பான வழக்கு பதிவு செய்து அப்பாராவை கடத்திய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !