India

என்னது தமிழ்நாட்டில் 50 மாவட்டமா?.. RSS வழக்கறிஞர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம்!

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணீந்தரரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் முகுல்ரோத்தகி, "நாங்கள் பேரணிக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும், தெருக்களிலும் நடத்த அனுமதிக்க இயலாது.

கோவையில் பி.எப்.ஐ தடை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக பிரச்சனைகள் உள்ளன. இதே போன்று பல இடங்களில் பிரச்சனைகள் உள்ளன. அங்கெல்லாம் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு பேரணிக்கு அனுமதிக்க முடியாது. அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் வழங்கினோம்.

காவல்துறை அதிகாரிகளின் அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன. நுண்ணறிவு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை முழுமையாக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் ஏன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை என்று கேட்டனர். அப்போது வழக்கறிஞர், இந்த பிரச்சனை அக்டோபர் மாதம் முதல் நீடிப்பதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையின் போது தமிழ்நாட்டின் 50 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அரசு தடுத்து நிறுத்துவதாக ஆர்.எஸ்.எஸ். சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியுள்ளார். இதைக்கேட்டு அரசு வழக்கறிஞரும், நீதிபதியும் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் உள்ளது என்று நான் கேள்விபட்டதேஇல்லை என கூறியபோது, தனது தவறான வாதத்தை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ் வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் உள்ள மாவட்டங்களின் எண்ணைக்கையை குறிப்பிட்டதாகப் பின்னர் மாற்றிப் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டம் இருக்கிறது என்று கூட தெரியாமல் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அசிங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்த மீச வச்ச.. இனிமேல் இப்படி பேசுனா எப்படி அடி விழும் என காட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் !