India
தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மகன்.. live Streamingல் பார்த்து ரசித்த காதலி: ஆந்திராவில் கொடூரம்
ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லிபாபு. இவரது மகன் பாரத். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் சட்டவிரோதமாகப் பழகி வந்துள்ளார். இதனால் அவரது தந்தை மகனை கண்டித்துள்ளார். இருப்பினும் பாரத் தந்தை பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகிவந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலிஸார் காவல்நிலையம் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.
பின்னர், சொந்த மகன் என்றும் பார்க்காமல் தன் மீதே தந்தை புகார் கொடுத்தால் பாரத் ஆத்திரத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த தந்தையைச் சரமாரியாக அடித்து கம்பத்தில் கட்டிவைத்துள்ளார்.
பிறகு, தான் பழகிவந்த பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் வீடியோ காலில் தொடர்பு கொண்டு தந்தை அடிப்பதை பார்க்கும்படி கூறியுள்ளார். பின்னர் மீண்டும் தந்தையைச் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை அந்த பெண் வீடியோ லைவில் பார்த்து ரசித்துள்ளார்.
இதையடுத்து தந்தையை மகன் கட்டிவைத்து அடிப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் சாடியவல் யானைகள் முகாம் : திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர் : வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
திருத்தணி சம்பவம்! : உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறை! நடந்தது என்ன?