உலகம்

8 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கணவர்.. சுறா மீன் வயிற்றுக்குள் கண்டுபிடித்த சோகம்.. என்ன நடந்தது?

சுறா மீன் வயிற்றுக்குள் காணாமல் போன நபரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அர்ஜென்டினாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கணவர்.. சுறா மீன் வயிற்றுக்குள் கண்டுபிடித்த சோகம்.. என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் டியாகோ பேரியா (Diego Alejandro Barria) என்ற 32 வயது இளைஞர். இவருக்கு விர்ஜினியா பிரக்கர் (Virginia Brugger) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், டியாகோ கடந்த 18-ம் தேதி காணாமல் போனதாக விர்ஜினியா காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

8 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கணவர்.. சுறா மீன் வயிற்றுக்குள் கண்டுபிடித்த சோகம்.. என்ன நடந்தது?

மேலும் அவரை காணவில்லை என்பதால் அனைவரும் அநேக இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தையும் ஹெல்மெட்டையும், கடற்கரை ஓரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

8 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கணவர்.. சுறா மீன் வயிற்றுக்குள் கண்டுபிடித்த சோகம்.. என்ன நடந்தது?

அவர் காணாமல் சுமார் 8 நாட்களுக்கு பிறகு நேற்று விர்ஜினியாவுக்கு, அவரது கணவர் குறித்து அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்தது. அதாவது மீன் பிடிக்கும் மீனவர் ஒருவர் சுறா மீனை பிடித்துள்ளார். அப்போது வழக்கம்போல் அவர் பிடித்த மீனை சுத்தம் செய்துள்ளார். அந்த சமயத்தில் சுறா மீனின் வயிற்றுக்குள் மனித கழிவு இருந்ததை கண்டுள்ளார். அதோடு சில உடல் பாகங்களும் இருந்தததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

8 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கணவர்.. சுறா மீன் வயிற்றுக்குள் கண்டுபிடித்த சோகம்.. என்ன நடந்தது?

இதையடுத்து அந்த மீனவர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அந்த இதுகுறித்து விர்ஜினியாவுக்கும் தகவல் கொடுத்தனர். எனவே அவர் அங்கு வந்து அந்த உடல் பாகங்களை பார்த்தார். அப்போது அதில் ஒரு பாகத்தில் அவரது காணாமல் போன கணவர் டியாகோவின் டாட்டூ இருந்தது கண்டறியப்பட்டது.

இதன்மூலம் சுறாவின் வயிற்றுக்குள் இருந்த மனித கழிவு டியாகோயுடையது என்று உறுதியானது. இதையடுத்து காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதனால் அவர் கடல் பகுதிக்கு சென்றார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

8 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கணவர்.. சுறா மீன் வயிற்றுக்குள் கண்டுபிடித்த சோகம்.. என்ன நடந்தது?

பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் இருப்பது அரிதான ஒன்றாகவே கருதப்படுவதாகவும், இருப்பினும் டியாகோவை யாரேனும் கொலை செய்து கடலில் வீசியெறிந்தனரா? அல்லது அவர் தற்கொலை செய்ய கடற்கரைக்கு சென்றாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

காணாமல் போன கணவரின் உடல் பாகத்தை ஒரு சுறா மீனின் வயிற்றுக்குள் மனைவி கண்டுபிடித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories