India

தண்டவாளத்தில் INSTA ரீல்ஸ் செய்த நண்பர்கள்.. வேகமாக வந்த இரயில்.. துண்டு துண்டான உடல்கள் !

நவீன உலகில் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய உபகரணங்களில் முக்கியமானவையாக மொபைல் போன்கள் உள்ளது. அதில் முக்கியமான ஆப்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. எப்போது இந்த மொபைல் போன்களில் செல்பி என்ற ஒன்று வந்ததோ, அப்போதில் இருந்து உயிரிழப்புகள் குறித்த செய்திகளும் வந்த வண்ணமாக காணப்படுகிறது.

அதோடு டிக் டாக் என்ற ஆப் மூலம் தங்கள் திறமைகளை உலகிற்கு காட்டலாம் என்று அநேகமானோர் பல விஷயங்களை செய்து வந்தனர். டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதும், இன்ஸ்டாவில் ரீல்ஸ் என்ற ஒன்று வந்தது. தொடர்ந்து மக்கள் தற்போது அதனை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரீல்ஸ் மூலம் மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுவே சில நேரங்களில் அவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறது. இவ்வாறு ரீல்ஸ் செய்யும்போது சில விபரீதங்கள் ஏற்பட்டு சில பேருக்கு உடல் உறுப்புகள் சேதமடைந்ததோடு, மேலும் சில பேர்களுக்கு உயிரே பறிபோகும் நிலை உண்டாக்குகிறது. தற்போது இதுபோன்ற செயல்களுக்கு அனைவரும் அடிமையாகி விட்டனர் என்றே சொல்லலாம்.

சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் சிலர் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், உயரமான இடங்களில் நின்று செல்பி எடுப்பது, ஆபத்தான இடங்களில் இருந்து ரீல்ஸ் செய்வது போன்ற செயல்களை செய்கின்றனர். இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருக்கும்போது தண்டவாளம் அருகே நின்று இளைஞர் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது வந்த இரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் இதே போல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிழக்கு டெல்லியின் காந்தி நகர் மேம்பாலம் அருகே இரயில் தண்டவாள பாதை ஒன்று உள்ளது. இங்கே நேற்றைய முன்தினம், இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் இன்ஸ்டா ரீல்ஸ் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வேகமாக வந்த இரயில் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து இரண்டு சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது இவர்கள் இரண்டு பெரும் நண்பர்கள் என்றும், இவர்கள் அருகிலிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவர் வான்ஷ் ஷர்மா (23) என்றும் மோனு (20) என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அவர்கள் பயன்படுத்தி வந்த மொபைல் போனும், வேறு பக்கத்தில் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு- உயிரிழந்த இளைஞர்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டிலும் இதேபோல் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் செய்து வந்த மூன்று இளைஞர்கள் மீது விரைவு ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: என்னடா இப்படி இறங்கிட்டீங்க.. திருமணத்திற்குப் பெண் வேண்டி 105 கி.மீ பாதயாத்திரை தொடங்கிய 90S கிட்ஸ்கள்!