India
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பெண் புலி.. ஒன்றாக கறிவைத்து உண்ட கிராம மக்கள்.. ஆந்திராவில் அதிர்ச்சி !
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புலிகள் வாழ்ந்து வருகிறது. மேலும், இந்த காட்டு பகுதியில் யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற விலங்குகளில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
இந்த காட்டு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் அடிக்கடி வந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதால் பயிர்களை காப்பாற்ற கிராம மக்கள் மின்வேலிகளை அமைத்துள்ளனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வகை வேலிகளை வனத்துறையினர் வந்து அகற்றினாலும் தொடர்ந்து இந்த செயல் நடந்துவருகிறது.
மேலும், இந்த மின்வேலிகளில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில் உள்ள ஆக்கப்பள்ளி என்ற கிராமத்தில் பெண் புலி ஒன்று விளைநிலம் அருகே வந்துள்ளது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இந்த புலி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனைக் கண்ட கிராமவாசிகள் அந்த புலியை வெட்டி அதை கறியாக்கி கிராம மக்கள் அனைவர்க்கும் குறிப்பிட்ட அளவு கொடுத்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் சிலருக்கு குறைந்த அளவே புலி கறி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரிக்க வந்த வனத்துறையினரை கிராமத்துக்குள் விடாமல் கிராமமக்கள் தடுத்ததால் கூடுதல் படையினரை அழைத்துக்கொண்டு வனத்துறையினர் கிராமத்துக்குள் நுழைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!