India
திருமண செலவுக்காக ATM-ல் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்.. போலிஸாரிடம் சிக்கியது எப்படி?
விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் புதுச்சேரி நகரப் பகுதியில் 14 தனியார் வங்கி ATM எந்திரங்களின் பராமரிப்பை கவனித்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் பணியில் இருந்தபோது, அவரது செல்போனுக்கு லெனின் வீதியில் உள்ள ATM மையத்தில் இருந்து அலெர்ட் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
இதனால் பதறிய மூர்த்தி இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து போலிஸார் ATM மையத்திற்குச் சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் ATM எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டனர்.
பின்னர் உடனே போலிஸார் அந்த வாலிபரைப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் கன்னியாகுமரி மாங்கோடு பகுதியைச் சேர்ந்த அணு என்பதும், இவர் கடந்த இரண்டு மாதங்களாகப் புதுச்சேரியில் தங்கி உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தது தெரிந்தது.
மேலும், வீட்டில் பெண் பார்த்து வருவதால் திருமண செலவுக்காகப் பணம் தேவைப்படும் என்பதால் திருவண்ணாமலையில் நடந்த கொள்ளை சம்பவத்தை டிவியில் பார்த்து, அதேபாணியில் ATM எந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அணு மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் ATM எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மெஷினை பறிமுதல் செய்து அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!