India

2 பேரை கொன்ற பா.ஜ.க MLA ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்.. நான்கு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை- பரபரப்பு!

பெங்களூரில் உள்ள ந்ருபதுங்கா சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த இருவரது சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்த இருவர் லேவுட் பகுதியைச் சேர்ந்த மஜீத் கான், கே.ஜி. ஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஜயப்பா என்பதும் தெரியவந்தது. மேலும் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மோகன் என்பரை போலிஸார் கைதுசெய்தனர்.

அதோடு விபத்து ஏற்படுத்திய காரில் சாகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஹர்தலு ஹலப்பாவுக்கு அரசு வழங்கிய MLA ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் இந்த சார் ஹர்தலு ஹலப்பாவின் சம்பந்தியான ராம சுரேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரது மகளை அழைத்து செல்வதற்காக சென்றுபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வதற்காக அவர்கள் பயன்படுத்தும் காரில் ஒட்டுவதற்காக அரசு வழங்கிய ஸ்டிக்கரை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஹர்தலு ஹலப்பா சட்ட விரோதமாக சம்பந்தியின் காரில் ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read: "பொய் சொல்வதில் வல்லுநர்கள்".. மோடி அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு!