இந்தியா

"பொய் சொல்வதில் வல்லுநர்கள்".. மோடி அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு!

பா.ஜ.கவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

"பொய் சொல்வதில் வல்லுநர்கள்".. மோடி அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இது இந்தியாவில் பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

இதனால் அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதன் மீது விவாதம் நடத்தாமல் அவையை எதிர்க்கட்சிகள் முடக்குவதாகக் கூறி தொடர்ந்து நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு ஒத்திவைத்து வருகிறது.

"பொய் சொல்வதில் வல்லுநர்கள்".. மோடி அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு!

இந்நிலையில் பா.ஜ.கவினர் பொய் சொல்வதில் வல்லுநர்கள் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, " அதானி குழுமத்தின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற குழு முறையாக விசாரணை நடத்த வேண்டும் அப்படி இல்லை என்றால் தலைமை நீதிபதியின் கண்காணிப்புக்குக் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

"பொய் சொல்வதில் வல்லுநர்கள்".. மோடி அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு!

ஆனால் ஒன்றிய அரசு இதை ஏற்க மறுக்கிறது. ஏன் இந்த விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிடாமல் இருக்க காரணம் என்ன? இதன் மீது விவாதம் நடத்தாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் ஒன்றிய அரசு ஓடுகிறது.

அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் எதிர்கட்சிகள் குழப்பத்தை உருவாக்குகிறோம் என்று பொய் சொல்கிறார்கள். பா.ஜ.கவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள். பொய் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories