India

உ.பி-யை உலுக்கிய குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு.. 1 வருடம் கழித்து நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு !

உலகளவில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் பெங்களுக்கு எதிரான குற்றங்கள். அதிலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. இந்தியாவில் இதை கணக்கே இட முடியாது.

நாள்தோறும் சிறார், பெண்கள் உள்ளிட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. இந்த வன்கொடுமை காரணமாக நாட்டில் பல்வேறு இடங்களில் பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்புகள் உடனடியாக வழங்கப்படுவதும் இல்லை. எனினும் சில காலங்கள் கழித்து கூட இது தொடர்பான வழக்கின் தீர்ப்புகள் வெளியாகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தில் தற்போது தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதாவது உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள ஜன்சத் டவுன் என்ற பகுதியை சேர்ந்தவர் 3 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த சிறுமியை 2 மர்ம நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர். சிறுமியை ஒரு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவரை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். இதில் அந்த சிறுமி மூர்ச்சையாகியுள்ளார். இதையடுத்து சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக சோனி என்ற சுரேந்தர் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் 363 (கடத்தல்) , 302 (கொலை செய்தல்) , 120B (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளிலும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இது தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பாபுராம் அளித்த தீர்ப்பின் படி, குற்றவாளிகளில் ஒருவரான சிறுமியை கொலை செய்த சோனியை சாகும் வரை தூக்கிலிடவும், மற்றொரு குற்றவாளியான ராஜேஷுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் கொடுத்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இவர்களுக்கு கொடுக்கப்படும் இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு படமாக அமைய வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: நடுரோட்டில் கவிழ்ந்த கான்கிரீட் லாரி.. அப்பளம் போல் நொறுங்கிய கார்: தாய் - மகளுக்கு நடந்த துயரம்!