India
125வது நாள்.. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம்: ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த ராகுல் காந்தி!
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை அடுத்து இன்று ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது.
இந்த நடைபயணத்தில் ராகுல் காந்திக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து அவரது நடைபயணத்தில் பங்கேற்றனர். அதோடு ஒவ்வொறு மாநிலத்திலும் ராகுல் காந்தி சென்றபோது அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் மாநிலத்திலும் நடந்த பொதுக்கூட்டங்களில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை மக்கள் மத்தியில் வெளிச்சம்போட்டு ராகுல் காந்தி காட்டிவருகிறார். மேலும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபயணம் சென்றபோது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டன.
இதனால் காங்கிரஸ் தொண்டர்களே ராகுல் காந்திக்கு அரணாக இருந்தனர். இப்படிப் பல நெருக்கடிகள் இருந்தபோதும் தொடர்ந்து நடைபயணத்தை மேற்கொண்டு இன்று ஜம்மு காஷ்மீருக்குள் ராகுல் காந்தி நுழைந்துள்ளார். இன்று முதல் 9 நாட்களுக்கு ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து வரும் 30ம் தேதி நிறைவடையும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!