India
நேருக்கு நேர் மோதிய பேருந்து - டிரக்.. 40 பேருக்கு நடந்த அதிர்ச்சி.. சீரடிக்கு சென்றபோது நேர்ந்த சோகம் !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில் உள்ளது நாசிக். இங்கு உள்ள சின்னார் தாலுகாவில் உள்ள பதரே ஷிவார் அருகே இன்று தனியார் சொகுசு பேருந்தும் - டிரக்கும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படு காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 7 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவர்.
இதைத்தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு மட்டுமின்றி, விபத்தில் சிக்கியவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காலை சுமார் 7 மணி அளவில் நடைபெற்ற இந்த கோரவிபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
தொடர்ந்து படு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கோர சம்பவம் நிகழ்ந்ததையடுத்து அம்மாநில முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாடு தலைகுனியாது” : 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு மாதம் பரப்புரை - துரைமுருகன் அறிவிப்பு!
-
இந்தியாவிலேயே முதன்முறையாக... கட்டணமில்லா HPV தடுப்பூசி திட்டம்! : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
உலக மகளிர் உச்சி மாநாடு 2026 மற்றும் TNWESAFE திட்டம் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
“மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சிதான் ‘TNWESAFE’ திட்டம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!