அரசியல்

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !

தமிழர் திருநாளன்று பாரத வங்கியின் தேர்வு தேதியை மாற்றாத ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்களை வஞ்சிப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலுத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட எஸ்.பி.ஐ வங்கியில் மொத்தமாக 5008 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மொத்தம் 355 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் அண்மையில் வெளியாகின.

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !

அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கி முதன்மைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற 15ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் தேர்வு தேதியை மாற்றக்கோரி அனைத்து தரப்பிலும் குரல்கள் வலுத்து வருகிறது.

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் எஸ்.பி.ஐ வங்கி தலைமை செயலாளருக்கு பலமுறை கடிதம் எழுதினார். அதற்கு பாரீசிலினை செய்யப்படும் என வங்கி சார்பில் பதில் வந்தாலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி எதிரே நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன், "கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி, தனது கிளார்க் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று தேர்வு தேதி இடம்பெற்றிருந்தது. `தமிழர் திருநாளன்று தேர்வு நடத்துவது என்பது ஒரு அநியாயமான செயல்.

எனவே உடனே தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எஸ்.பி.ஐ-யின் தலைமை செயலகம் மற்றும் நிதியமைச்சகத்தத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களுக்கும் பரீசீலினை செய்வதாக கூறினார்கள். தற்போது 20 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரை அதற்கு எந்த பதிலும் இல்லை. அவர்கள் இதுகுறித்து முடிவெடுக்க தயங்குகிறார்கள்.

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !

அதற்கு காரணம், இந்தியா முழுக்க நடைபெறும் இந்த தேர்வானது தமிழிலும் எழுதலாம். தமிழ்நாட்டில் பணியாற்றக்கூடிய பதவிக்கான இந்த தேர்வு 6 கோடி தமிழ் மக்களுக்கு சம்பந்தப்பட்ட பிரச்னை. ஒரு மதப்பண்டிகை நாளன்று இதுபோன்று தேர்வுகளை வைப்பார்களா? விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு தேர்வு அட்டவணையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார்களா ?

இத்தனை முறை சொன்ன பிறகும், தேர்வு தேதியை மாற்றாமல் வைத்திருப்பது இவர்கள் தமிழர்கள் மேல் காட்டும் விரோதப்போக்குதான். தமிழ்நாடு என்ற சொல்லை மறுப்பது; தமிழ்நாடு அரசின் சின்னத்தை பயன்படுத்த மறுப்பது; திருவள்ளுவர் ஆண்டை மறுப்பது; இவற்றின் தொடர்ச்சி தான் தற்போது தமிழர் திருநாளன்று தேர்வு வைப்பது.

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !

தேர்வு நடக்கும் நாளன்று மையங்கள் முழுக்க எஸ் பி ஐ வங்கியின் ஊழியர்கள் தேர்வு பணியாளர்களாக பணியாற்ற வேண்டும். அவர்களையும் பண்டிகையை கொண்டாட விடாமல் தடுக்கிறார்கள்.

இது வெறும் தேர்வார்கள் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டும் அல்ல; தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னை. 6 அரை கோடி தமிழர்களின் பிரச்னை. தமிழர்களின் அடையாளத்தை உரிமையை தொடர்ந்து மறுக்கிற பாஜக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வலிமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். தேர்வு தேதியை மாற்றும் வரை நாங்கள் போராடுவோம்.

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !

கடந்த ரம்லான் பண்டிகையன்று கூட நாடாளுமன்றத்தின் நிலைக்குழு கூட்டத்தை வைத்தார்கள். இதனை கண்டித்தபோது, அந்த கூட்டத்தில் ஒரே ஒரு இஸ்லாமியர் மட்டும்தான் உள்ளார்; பொறுத்துக்கொள்ளட்டும் என்றனர். இது ஒரு இஸ்லாமியருக்கோ அல்லது தேர்வு எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான பிரச்னையோ அல்ல.

இந்தியா என்பது அனைத்து தேசியத்திற்கும் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் கொடுக்கப்பட வேண்டும். தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் உரிமை தமிழ்நாட்டில் நலனை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்.

“விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி தேர்வு வைப்பீங்களா?” - நிர்மலா சீதாராமனுக்கு மதுரை MP சு.வெ சாட்டையடி !

சுமார் 2 மணி நேரங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த வங்கி ஊழியர்கள் அழைத்த நிலையில், உயரதிகாரிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. மேலும் அங்கிருந்த அதிகாரி ஒருவர், கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாக கூறினார்.

ஆனால் தற்போதே பேசி முடிவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.பி சு.வெங்கடேசன் வங்கி பொதுமேலாளர் அறையிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories

Related Stories