India

600 வீடுகளில் விரிசல்.. அச்சத்தில் மக்கள்: பூமிக்குள் மூழ்கும் நகரம்: எங்குத் தெரியுமா?

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் தரைப் பகுதியிலிருந்து ஆறு அடி உயரத்தில் உள்ள ஜோஷிமத் நகரம். இமயமலையையொட்டி இந்த கிராமம் உள்ளது என்பதாலும் ஜோதிர்மத் என்ற பெரிய கோவில் உள்ளதாலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நகரத்தில் உள்ள 9 வார்டுகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் விரசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

அதேபோல் ஜோதிர்மத் கோயிலிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து உத்தரகாண்ட் அரசு அவசரக்கால நிலையைப் பிறப்பித்து அப்பகுதி மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றது.

மேலும் ஏன் இப்படி வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது என்பது குறித்தும் தேசிய பேரிடர் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தாங்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்த பொருட்களை அப்படியே விட்டு விட்டு மக்கள் வேதனையுடன் வெளியேறிச் செல்கின்றனர்.

அதேபோல் ஸ்ரீநகர்-கர்வால் பகுதியும் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது. இதேபோல், ஆல் வெதர் ரோட்டில் இதுபோன்ற பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் ஜோஷிமத் போன்று பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஜோஷிமத் நகரப் பகுதியில் மட்டும் மொத்தம் 678 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் இதில் 81 குடும்பங்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும தெரிகிறது. மேலும் மக்களின் உயிரில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என உத்தரகாண்ட் பா.ஜ.க அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: நாட்டுக்காக வரமாட்டார்.. IPL என்றால் வந்துவிடுவார் -இந்திய அணியின் மூத்த வீரரை விமர்சிக்கும் ரசிகர்கள் !