India
நாயை வாங்க பழைய காதலன் வீட்டுக்கு சென்ற காதலி.. உடன் வந்த புதிய காதலன்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம் !
மும்பை அருகில் உள்ள கல்யாண் பகுதியை சேர்ந்தவர் லலித் உஜ்ஜைன்கர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கிரண் சோனாவானே என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அப்போது கிரண் தனது காதலர் லலித்துக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக கொடுத்துள்ளார்.
இவர்களின் இந்த காதல் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இருவரும் சிங்கிளாக இருந்த நிலையில், கிரணுக்கு ஆதித்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாகி மாற இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த தகவல் பழைய காதலர் லலித்துக்கு தெரியவந்த நிலையில், அவர் கிரணை சந்தித்து தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், இதற்கு கிரண் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரம் தான் கொடுத்த நாயை திரும்ப தன்னிடம் கொடுக்குமாறு கிரண் கூற அதற்கு லலித்தும் ஒப்புக்கொண்டு தனது வீட்டுக்கு வந்து அதை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதன்படி கிரண் தனது புதிய காதலர் ஆதித்யாவுடன் லலித் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் அங்கு லலித்தின் நண்பர்கள் 3 பேரும் இருந்துள்ளனர். அப்போது புதிய காதலனை கைவிடச்சொல்லி லலித் கிரணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில்,லலித் கிரணின் காதலர் ஆதித்தியாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஆதித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் லலித் மற்றம் அவரின் நண்பர்கள் அந்த பகுதியில் இருந்து ஓடியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் கொலையாளில் ஒருவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Also Read
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?