India
“என்னங்கடா நடக்குது இங்க..!” - இறுதி சடங்கின்போது கண்விழித்த பாட்டி.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் !
உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ளது ஜஸ்ரானா என்ற இடம். இதன் அருகே இருக்கும் பிலாஸ்பூர் என்ற பகுதியில் 81 வயது மதிக்கத்தக்க ஹரிபேஜி என்ற மூதாட்டி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு வயது முதிர்வால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அருகிலிருந்த ஒரு மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்து நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அவர் மூளை சாவு அடைந்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து அவருக்கு பாட்டியின் குடும்பத்தார் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் அவரை சுடுகாட்டுக்கு அழைத்து செல்லும்போது, திடீரென மூதாட்டி கண் விழித்துள்ளார். இதனை கண்ட பாட்டியின் மகனும், உறவினர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனர். தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். தேநீரும் அருந்தியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் உடல் நிலை மோசமாகவே காணப்பட்டதால், நேற்றைய முன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் சுக்ரீவ் சிங் அவருக்கு இறுதி சடங்கு நடத்தினார். இறந்துபோனதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், இறுதி சடங்கின்போது கண்விழித்த பாட்டி, மறுநாளே உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்ப்பட்டு அருகே காணாமல் போன தாயார், இரயிலில் அடிபட்டு இறந்து விட்டதாக எண்ணிய மகன் அவருக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்துள்ளார். மேலும் பல பகுதிகளில் போஸ்டரும் அடித்து ஒட்டியுள்ளார்.
ஆனால் தாயோ திடீரென உயிருடன் வந்து குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்