India
மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் செவிலியருக்கு நேர்ந்த துயரம்.. அதிர்ச்சியில் உணவு பிரியர்கள்!
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரஷ்மி. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்ஃபாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு சில மணி நேரத்திலேயே வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இருந்தும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தே வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரஷ்மி உயிரிழந்தார். அதோடு இதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு மேல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவிலியர் இறந்ததை அடுத்து அவர் பிரியாணி சாப்பிட்ட உணவகத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். அதோடு உணவு விஷமானதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கோட்டயத்தில் உள்ள அனைத்து உணவகத்திலும் சோதனை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மந்தி பிரியாணி சாப்பிட்டு செவிலியர் உயிரிழந்த சம்பவம் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!