India
காருக்குள் அமர்ந்து சிலிண்டரில் உள்ள வாயுவை சுவாசித்த இன்ஜினியர்.. இறுதியில் நடந்த சோகம் ! -பின்னணி என்ன
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விஜயகுமார் (51). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் அது பெரிதும் பலனளிக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்காக பல்வேறு வழிகளில் முயன்றும் அது சரிவர வேலை செய்யவில்லை என்பதால் புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று கடைக்கு சென்று நைட்ரஜன் சிலிண்டரை வாங்கியுள்ளார். பின்னர் தனது காரை ஒரு ஷீட் வைத்து மூடி, பின்னர் காருக்குள் சிலிண்டருடன் சென்றுள்ளார். பிறகு காரின் கதவை அடைத்து விட்டு, தனது முகத்தில் பிளாஸ்டிக் கவர் ஒன்றை வைத்து சூட்டிக்கொண்டார். தொடர்ந்து தான் கொண்டு வந்த சிலிண்டரை திறந்து அந்த கவருக்குள் வாயுவை திறந்து விட்டார்.
அந்த வாயு அவரது வாய்க்குள் சென்று மூச்சு முட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வை எதேர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் விரைந்த அவர்கள், விஜயகுமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தற்கொலை செய்துகொளவதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நைட்ரஜன் வாயுவை சுவாசித்து இன்ஜினியர் ஒருவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!