India
இராணுவ வாகன விபத்து.. 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. நாடு முழுவதும் அதிர்வலை !
சிக்கிம் மாநிலத்திலுள்ள வடக்கு பகுதியில் இருக்கும் பள்ளத்தாக்கு ஒன்றில் இந்திய இராணுவ வாகனம் ஒன்று சிக்கி விபத்துக்குள்ளானதில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சிக்கிமிலுள்ள சாட்டன் என்ற இடத்திலிருந்து தங்கு என்ற இடத்தை நோக்கி இன்று பகல் நேரத்தில் இராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் சென்றுள்ளது.
அப்போது வடக்கு பகுதியில் செமா என்ற இடத்தில் வளைவில் வாகனம் திரும்பியுள்ளது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த வாகனம் உடனே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் மீட்புக்குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த விபத்தில் சிக்கி 16 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து விபத்தில் சிக்கிய மேலும் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதோடு உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
தொடர்ந்து இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 4 இராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !