India
தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..ஒருநாள் சிறைத்தண்டனை விதித்த போலிஸார்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.
அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் மஹாராஷ்டிராவில் எருமையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மும்பையில் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்திர பகத். இவர் மகாராஷ்டிரா மாநிலம் ஹுட்கேஷ்வர் பகுதிக்கு வேலைக்கு வந்து அங்கேயே வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பூங்காவில் சுற்றுத்திரிந்த தெருநாய் ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அந்த பகுதியில் இருந்த சிறுவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், அது வைரலானது. அந்த வீடியோவை வைத்து தொண்டு நிறுவனம் ஒன்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், நாயை வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒருநாள் சிறைத்தண்டனை விதிக்கப்ப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நாய்க்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த நாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!