India
“கைத்தறி பொருட்களுக்கு 5% GST.. மகாத்மா காந்தியை ஒன்றிய அரசு அவமதித்துவிட்டது” : MM.அப்துல்லா பேச்சு!
பஞ்சு நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும், பருத்தியை யூக வணிகத்திலிருந்து நீக்கி, அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், அவற்றைக் காதில் வாங்க்கொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு கைத்தறி பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வித்தித்துள்ளது. பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு கைத்தறி நெசவாளர்கள், எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கைத்தறி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5% ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தில் பேசிய எம்.எம்.அப்துல்லா, “விவசாயத்தையும், கைத்தறியையும் நாட்டின் இரு கண்கள் என மகாத்மா காந்தி கூறியிருக்கும் நிலையில், கைத்தறி பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. வரி விதித்து தேசத்தந்தை மகாத்மா காந்தியை ஒன்றிய பா.ஜ.க அரசு அவமதித்துவிட்டது” என விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கைத்தறி பொருட்களுக்கு வரி வித்திருப்பது ஏற்படையது அல்ல, விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்பை பெற்று தருகிறது இந்த கைத்தறித் துறை. 2017ம் வரை முன்பு இருந்த எந்த அரசாங்கம் கைத்தறி பொருட்களுக்கு வரி விதிக்கவில்லை.
பா.ஜ.க அரசு தான் வரியை விதித்து கைத்தறி நெசவாளர்களை வஞ்சிக்கிறது. அதுமட்டுமல்லாது கைத்தறி நெசவாளர்கள் நலத்திட்டங்களையும் புறக்கணித்து வருகிறது. சுற்றுசூழலைக் காக்க பல ஆயிரம் கோடி நிதி செலவிடும் ஒன்றிய அரசு, சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் தயாரிக்கப்படும் கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது விந்தையாக உள்ளது.
ஏற்கனவே துயரத்தில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களின் துயரை போக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யவேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!