India
கண்ணே தெரியல.. கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய 40 வாகனம் : நெடுஞ்சாலையில் நடந்த விபத்து!
உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் நவம்பர் இறுதியில் தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை கடும் குளிர்காலம் நிலவும். அந்த வகையில் இந்த ஆண்டு வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 5 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான குளிர் நிலவுவதால் காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது.
மேலும் நம் கண்ணுக்கு முன்னே என்ன இருக்கிறது என்று தெரியாத அளவிற்குப் பனிமூட்டம் இருக்கிறது. இதனால் வடமாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாரின் அர்னியா பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து 40 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பள்ளி வாகனம் ஒன்றும் விபத்தைச் சந்தித்துள்ளது. இதில் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடும் பனிமூட்டத்தினால் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பனிமூட்டத்தால் ஏற்படும் விபத்தை தவிர்க போதுமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!